இலங்கையில் பரீட்சைகள் தொடர்பில் பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு
இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் ஊடாக நடாத்தப்படும் பரீட்சைகளுக்கான திட்டமிடல் அடுத்த வருடத்தில் இருந்து முன்பு இடம்பெற்றது போன்று நடாத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இதனை பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர பிரதமரிடம் முன்வைத்த வாய்மொழி மூலமாக கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இதனை குறிப்பிட்டார்.
அதன்படி 2026 ஆம் ஆண்டில் இருந்து, முன்பு இடம்பெற்றது போன்று சாதாரண முறைப்படி பரீட்சைகளை நடாத்த முடியும் என்றும் கொரோனா தொற்று ஆரம்பிப்பதற்கு முன்னர் இடம்பெற்றவாறு பரீட்சைகள் உரிய கால அட்டவணையில் நடத்தப்பட முடியும் என்றும் பிரதமர் தெளிவுபடுத்தினார்.
(Visited 11 times, 11 visits today)