போலந்தின் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான திகதி அறிவிப்பு!
போலந்தின் ஜனாதிபதித் தேர்தல் மே 18 ஆம் திகதி நடைபெறும் என்றும், தேவைப்பட்டால் ஜூன் 1 ஆம் திகதி இரண்டாவது தேர்தல் நடத்தப்படும் என்றும் போலந்தின் நாடாளுமன்றத் தலைவர் தெரிவித்துள்ளார்.
போலந்துக்கும் ஐரோப்பாவிற்கும் சவாலான நேரத்தில் இந்த தேர்தலை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய வலதுசாரி ஜனாதிபதி Andrzej Duda அரசாங்கத்துடன் முரண்படுகிறார். மற்றும் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளார்.
அவர் தனது இரண்டாவது ஐந்தாண்டு பதவிக்காலத்தை முடித்துக்கொண்டு ஆகஸ்ட் மாதம் பதவியில் இருந்து விலக உள்ளார். போலந்தின் அரசியலமைப்பின் படி அவர் மற்றொரு பதவிக் காலத்தை கோர முடியாது.
(Visited 45 times, 1 visits today)





