அணுசக்தி திறன் கொண்ட ஆயுதங்களின் சேகரிப்பை விரிவுப்படுத்தும் வடகொரியா!
அணுசக்தி திறன் கொண்ட ஆயுதங்களின் சேகரிப்பை போட்டி நாடுகளுக்கு எதிராக மேலும் விரிவுபடுத்துவதாக வடகொரிய ஜனாதிபதி கிம்ஜொங் உன் சபதம் செய்துள்ளார்.
தென் கொரியாவின் கூட்டுப் படைத் தலைவர்களின் செய்தித் தொடர்பாளர் லீ சங் ஜூன் இந்த தகவலை குறிப்பிட்டுள்ளார்.
பசிபிக் பகுதியில் உள்ள தொலைதூர இலக்குகளைத் தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட புதிய ஹைப்பர்சோனிக் ஏவுகணையை நேற்று வடகொரியா சோதனை செய்தது.
ஏவுகணை ஒலியின் 12 மடங்கு வேகத்தில் 930 மைல்கள் பறந்ததாக வட கொரியா கூறியிருந்தது.
இந்நிலையில் தற்போது அணுவாயுதங்களை விரிவாக்க அவர் முடிவு செய்துள்ளதாக தென் கொரிய ராணுவம் நம்புகிறது என லீ சங் தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரலில் நடந்த மற்றொரு ஹைப்பர்சோனிக் இடைநிலை பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையின் தொடர்ச்சியாக இந்த சோதனை இருக்கலாம் என்றும், கொரிய தீபகற்பம் போன்ற ஒப்பீட்டளவில் சிறிய பிரதேசத்தில் இதுபோன்ற அமைப்புகளைப் பயன்படுத்துவது கடினம் என்றும் லீ கூறினார்.