5 புதிய இலங்கை தூதுவர்கள் ஜனாதிபதியினால் நியமனம்

இலங்கையின் இராஜதந்திர சேவையில் பணியாற்றுவதற்காக உயர்ஸ்தானிகர் ஒருவரையும் நான்கு தூதுவர்களையும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நியமித்தார்.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று (07) இடம்பெற்ற உத்தியோகபூர்வ வைபவத்தின் போது ஜனாதிபதியினால் உத்தியோகபூர்வ நியமனங்கள் வழங்கப்பட்டன.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இராஜதந்திரிகள் நியமனங்களை தொடர்ந்து ஜனாதிபதியுடன் சுருக்கமான கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர்.
இதன்படி, கட்டாருக்கான தூதுவராக ஆர்.எஸ்.கான் அசாத்தும் ரஷ்யாவுக்கான தூதுவராக எஸ்.கே.குணசேகரவும், குவைத்துக்கான தூதுவராக எல்.பி.ரத்நாயக்கவும் எகிப்துக்கான தூதுவராக ஏ.எஸ்.கே.செனவிரத்னவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், நியூசிலாந்துக்கான உயர்ஸ்தானிகராக டபிள்யூ.ஜீ.எஸ். பிரசன்ன நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
(Visited 37 times, 1 visits today)