Air France விமானத்திற்கு காத்திருந்த ஆபத்து – அதிஷ்டவசமாக உயிர்தப்பிய பயணிகள்
Air France விமானத்தில் காற்று அழுத்தக் கோளாறு ஏற்பட்டதால் பாரிஸ் Charles de Gaulle விமான நிலையத்துக்கு மீண்டும் திரும்பியுள்ளது.
8000 அடி உயரத்தில் பயணித்துக் கொண்டிருந்த விமானம் 17 நிமிடங்களில் கோளாறு ஏற்பட்டு மீண்டும் திரும்பியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை ஸ்பெயினுக்கு புறப்பட்ட விமானம் அவசரமாக Charles de Gaulle விமான நிலையத்துக்குத் திரும்பியது.
விமானத்தில் பயணிகள் உயிர்வாயுக் கவசத்தை அணிந்திருப்பதைக் காட்டும் காணொளிகள் இணையத்தில் பகிரப்படுகின்றன.
விமானம் பாதுகாப்பாக மீண்டும் Charles de Gaulle விமான நிலையத்தில் தரையிறங்கியது.
அதிஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்ற போதிலும் விமானத்தில் பயணிகள் அச்சத்தில் கூச்சலிட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.
(Visited 14 times, 1 visits today)