சிங்கப்பூரில் குடியேற நடக்கும் போலித் திருமணங்கள் – சிக்கிய கும்பல்
சிங்கப்பூரில் போலித் திருமணம் செய்துகொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஆண்டின் முதல் 9 மாதங்களில் 32 பேர் கைதுசெய்யப்பட்டதாகக் குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் தெரிவித்துள்ளது.
2023ஆம் ஆண்டில் பதிவான எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் அது 7 மடங்கு அதிகமாகும்.
சிங்கப்பூரில் வெகுகாலம் இருக்க உதவும் குடிநுழைவு அனுமதியைப் பெறுவதற்காகச் சிலர் போலித் திருமணம் செய்துகொள்கின்றனர்.
கும்பல் ஒன்று அத்தகைய போலித் திருமணங்களுக்கு ஏற்பாடு செய்வதாக அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடத்தப்பட்ட அமலாக்க நடவடிக்கையில் மட்டும் 13 பேர் பிடிபிட்டனர். அவர்கள் 22 வயதுக்கும் 32 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
அவர்களில் வியட்நாமைச் சேர்ந்த 6 பெண்களும் சிங்கப்பூரைச் சேர்ந்த 7 ஆண்களும் அடங்குவர்.
சிங்கப்பூரில் போலித் திருமணம் பதிவுசெய்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் 10,000 வெள்ளி அபராதம் அல்லது 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.