ரஷ்ய இராணுவத்தில் 500 சிங்கள மற்றும் தமிழ் இளைஞர்கள் – வெளியாகும் பகீர் தகவல்கள்

இலங்கையின் சிங்கள மற்றும் தமிழ் இளைஞர்கள் 500 பேர் ரஷ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் கொழும்பில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டம் இன்றையதினம்(06.01.2025) கொழும்பில் அமைந்துள்ள வெளிவிவகார அமைச்சகத்திற்கு முன்பாக நடத்தப்பட்டுள்ளது.
இளைஞர்களின் தாய்மார்கள் மற்றும் உறவினர்கள் இந்த போராட்டத்தை நடத்தியுள்ளனர்.
இதன்போது, கருத்து தெரிவித்த தாயார் ஒருவர், மகனை பெல்ஜியம் செல்வதற்கு உதவுவதாக கூறிய தனது சகோதரன், எங்களை ஏமாற்றி மகனை ரஷ்யாவிற்கு அனுப்பியதாக கூறியுள்ளார்.
மேலும், ரஷ்யாவிற்கு சென்ற உடன் தனது மகனுக்கு இராணுவ பயிற்சி வழங்கப்பட்டு பின்பு இராணுவத்தில் இணைக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
(Visited 12 times, 1 visits today)