பிரான்ஸில் 30 ஆண்டுகளின் பின்னர் ஏற்பட்டுள்ள மாற்றம்!
பிரான்ஸில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவு மிக குறைவான குழந்தை பிறப்பு வீதம் பதிவாகியுள்ளதாக நேற்றைய தினம் வெளியாகியுள்ள புதிய புள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ளது.
இவ்வருடத்தின் மார்ச் மாதத்தில் இந்த குறைந்த அளவு பிறப்பு வீதம் பதிவாகியுள்ளது.
இந்த மார்ச் மாதத்தில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 1,816 குழந்தைகள் பிரான்சில் பிறந்துள்ளன. இது முந்தைய 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் 7% சதவீதம் குறைவாகும்.
அதேவேளை இந்த குறைந்த எண்ணிக்கையானது 1994 ஆம் ஆண்டின் பின்னர் பிரான்சில் பதிவாகுவதாக இந்த ஆய்வை மேற்கொண்ட INSEE நிறுவனம் அறிவித்துள்ளது.
2022 ஆம் ஆண்டில் பிரான்சில் 723,000 குழந்தைகள் பிறந்துள்ளன. இந்த எண்ணிக்கை முந்தைய 2021 ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 19,000 குழந்தைகள் குறைவாகும்.
(Visited 3 times, 1 visits today)