எலன் மஸ்க்கின் திடீர் தீர்மானம் – பதவிக்கு வரும் புதியவர்
டுவிட்டரின் தலைமை நிர்வாக பதவியில் இருந்து எலான் மஸ்க் விலக தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலக பணக்காரர்களில் ஒருவராக இருப்பவர் எலான் மஸ்க். அமெரிக்கவைச் சேர்ந்தவரான இவர் கடந்த ஆண்டு டுவிட்டர் நிறுவனத்தை பெரிய தொகைக்கு வாங்கியுள்ளார்.
அதன் பின்னர் எலான் மஸ்க் டுவிட்டரில் பல மாற்றங்களைக் கொண்டு வந்தார். முதல் கட்டமாக இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த ட்விட்டரின் தலைமைச் செயல் அதிகாரியான பாராக் அகர்வாலை பணியிலிருந்து நீக்கம் செய்தார்.
அதுமட்டுமல்லாமல், உயர் பதவியில் உள்ள பல முக்கிய தலைவர்களையும், ஊழியர்களையும் பணிநீக்கம் செய்தார். இதனால், டுவிட்டருக்கான சி.இ.ஓ. பதவி காலியாகவே இருந்தது. இந்த நிலையில் புதிய டுவிட்டர் தலைமை நிர்வாக அதிகாரியை தேர்வு செய்துள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “டுவிட்டருக்கு புதிய தலைமை நிர்வாக அதிகாரியை நியமித்துள்ளேன் என்பதை அறிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். அவர் இன்னும் 6 வாரங்களில் பணியை தொடங்குவார்.
அதனால், தயாரிப்பு, மென்பொருள் மற்றும் சிஸ்டம் ஆபரேட்களை மேற்பார்வையிடும், நிர்வாகத் தலைவராக எனது பங்களிப்பு மாறும்” என்று அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.