பிரான்ஸில் மிகப்பெரிய போதைப்பொருள் கும்பலை காட்டிக்கொடுத்த நாய்
பிரான்ஸில் மிகப்பெரிய போதைப்பொருள் கும்பலை பொலிஸ் மோப்ப நாய் காட்டிக்கொடுத்துள்ளது.
Flins-sur-Seine (Yvelines) நகரில் 2.4 தொன் எடையுள்ள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
நேற்று புதன்கிழமை காலை Flins-sur-Seine நகர பொலிஸாரால் இந்த பெரும் தொகை கஞ்சா மூட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளது.
ட்ரக் வாகனம் ஒன்றில் மறைத்து எடுத்துச் செல்லப்பட்ட வழியில் பொலிஸார் மோப்ப நாயின் உதவியுடன் அதனைக் கைப்பற்றியுள்ளனர்.
வாகன சாரதி உட்பட சம்பவத்தில் தொடர்புடைய மூவரை பொலிஸார் கைது செய்தனர். குறித்த ட்ரக் வாகனம் Mureaux நகர பொலிஸ் நிலையத்துக்கு கொண்டுசெல்லப்பட்டது.
உள்துறை அமைச்சர் Gérald Darmanin நேற்று மாலை 6 மணி அளவில் சம்பவ இடத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
(Visited 4 times, 1 visits today)