உலகின் மிகவும் மாசடைந்த நகரம் – முதலிடத்தை பிடித்த வியட்நாம் தலைநகரம்

உலகின் மிகவும் மாசடைந்த நகரமாக ஹனோய் மாறியுள்ளது.
வியட்நாம் தலைநகர் ஹனோயில் கடந்த சில வாரங்களாகவே புகை மூட்டமாக காணப்பட்டுள்ளது.
சுகாதாரத்தை அதிகம் பாதிக்கக்கூடிய சிறிய துகள்கள் PM2.5 என்று அழைக்கப்படுகின்றன.
நகரில் ஒரு கனமீட்டருக்கு 266 மைக்ரோகிராம் துகள்கள் இருப்பதாக AirVisual எனும் தூய்மைக்கேட்டுத் தகவல் தளம் குறிப்பிட்டுள்ளது.
வாகனப் போக்குவரத்து, தொழிலியல் நடவடிக்கைகள், குப்பை எரித்தல் போன்றவற்றால் புகை மூட்டம் ஏற்படுவதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில் குடியிருப்பாளர்களை மின்சார வாகனங்களுக்கு மாற வைப்பதற்குக் கூடுதல் முயற்சி எடுக்கவேண்டும் என்று வியட்நாமின் போக்குவரத்து அமைச்சு வலியுறுத்தியது.
(Visited 10 times, 1 visits today)