தென் கொரியாவை பாரிய தீ விபத்து – 300க்கும் அதிகமானோர் அவசரமாக வெளியேற்றம்
தென் கொரியாவின் சியோங்நாம் நகரில் பாரிய தீ விபத்து ஏற்பட்ட நிலையில் கட்டடத்திலிருந்து 300க்கும் அதிகமானோர் வெளியேற்றப்பட்டதாக தெரியவந்துள்ளது.
வர்த்தகக் கட்டடம் ஒன்றில் மூண்ட தீயை அணைப்பதில் 260க்கும் மேற்பட்ட தீயணைப்பாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
தீயைப் பற்றித் தகவல் கிடைத்த சுமார் ஒன்றரை மணி நேரத்துக்குப் பின் அது அணைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
தீயணைப்பாளர்கள் 240க்கும் அதிகமானோரைக் காப்பாற்றினர். சுமார் 70 பேர் அவர்களாகவே கட்டடத்திலிருந்து வெளியேறினர்.
கட்டடத்தின் நிலத்துக்கு அடியில் இருந்த தளங்களில் சுமார் 30 பேர் சிக்கியிருந்தனர். அவர்கள் பின்னர் காப்பாற்றப்பட்டதாக தெரியவந்துள்ளது.
அதிஷ்டவசமாக இந்த தீ விபத்தில் யாருக்கும் கடுமையான காயம் ஏற்படவில்லை.





