இலங்கை : CIDயில் முன்னிலையானார் மஹிந்தவின் இரண்டாவது புதல்வன்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகன் யோஷித ராஜபக்ச வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்வதற்காக இன்று காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு (CID) வருகை தந்துள்ளார்.
கதிர்காமத்தில் உள்ள அரசாங்கத்திற்கு சொந்தமான காணியின் உரிமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவர் அழைக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாராச்சி பாரியளவிலான சொத்துக்களை எவ்வாறு சம்பாதித்தார் என்பது தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நான்கு மணிநேரம் அவரிடம் விசாரணை நடத்தியிருந்தனர்.
(Visited 64 times, 1 visits today)