செய்தி வட அமெரிக்கா

அமெரிக்காவில் அதிகரிக்கும் இந்திய மாணவர்கள் எண்ணிக்கை

இந்­தியா, சென்ற ஆண்­டில் அதற்கு முந்­தைய ஆண்­டை­விட அதிக மாண­வர்­களை அமெ­ரிக்­கா­வில் படிக்க அனுமதி வழங்கியது.

அதே­ கா­ல­க்கட்­டத்­தில் சீனா­வில் இருந்து அமெ­ரிக்­கா­வுக்குக் கல்வி கற்க சென்ற மாண­வர்­களின் எண்­ணிக்கை முன்­பை­விட குறை­வாக இருந்ததாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது..

அமெ­ரிக்­கா­வில் படிக்­கும் ஆசிய மாண­வர்களில் சீனர்கள், இந்தியர்கள் அதி­கம் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

கடந்த 2021ஆம் ஆண்­டு­டன் ஒப்­பி­டு­கை­யில் சென்ற ஆண்டில் அமெ­ரிக்­கா­வுக்குப் படிக்கச் சென்ற சீன மாண­வர்­க­ளின் எண்ணிக்கை 24,796 ஆக குறைந்துள்ளது.

அதே­வே­ளை­யில், இந்­தி­யா­வில் இருந்து அமெ­ரிக்­கா­வுக்குக் கல்வி கற்க சென்­ற­வர்­க­ளின் எண்­ணிக்கை 64,300 அதி­க­மாக இருந்­தது என்று அமெ­ரிக்க குடி­நு­ழைவு, சுங்­கச்­சா­வடி அம­லாக்­கத் துறை வருடாந்திர அறிக்­கை­யில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெ­ரிக்­க மாநி­லங்­களி­லேயே கலி­ஃபோர்­னி­யா­வில் தான் 225,173 அனைத்­து­லக மாண­வர்­கள் கல்வி கற்­கி­றார்­கள்.

இது அமெ­ரிக்­கா­வில் பயி­லும் மொத்த வெளி­நாட்டு மாண­வர்­களில் 16.5% ஆகும்.

2021-2022 கல்வி ஆண்­டில் அமெ­ரிக்­கா­வில் படித்த இந்­திய மாணவர்களின் எண்­ணிக்கை 199,182 ஆகும். இது அதற்கு முந்தைய ஆண்­டை­விட 20% அதி­கம்.

(Visited 6 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி