ஐரோப்பா செய்தி

இத்தாலியில் நடந்த வெடிப்பு சம்பவம்!! பல வாகனங்கள் தீக்கிரையானது

இத்தாலியின் மிலன் நகரின் மையப்பகுதியில் நடந்த வெடிப்புச் சம்பவத்தையடுத்து வாகனங்கள் தீப்பற்றி எரிந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

நகரில் உள்ள வேன் ஒன்றில் இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆக்ஸிஜன் சிலிண்டர்களை ஏற்றிச் சென்ற வாகனம் ஒன்று வெடித்து சிதறியதாக கூறப்படுகிறது.

ஏராளமான வாகனங்கள் தீப்பிடித்து எரிந்துள்ளதாகவும், இடிபாடுகளுக்கு மேல் அடர்ந்த கரும் புகை எழுந்து வருவதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குடியிருப்பு வளாகம் மற்றும் மருந்தகத்தை நோக்கி தீ பரவியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் அப்பகுதியில் உள்ள பாடசாலை மற்றும் முதியோர் இல்லத்தில் உள்ள மக்களை வெளியேற்ற உள்ளூர் பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 9 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி