இலங்கையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள e-Traffic செயலி!

கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டத்துடன் இணைந்து, இலங்கை காவல்துறை இ-டிராஃபிக் மொபைல் போன் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
பதில் பொலிஸ் மா அதிபர் திரு.பிரியந்த வீரசூரிய அவர்கள் கையடக்கத் தொலைபேசி செயலியை இன்று (01) பொலிஸ் தலைமையகத்தில் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்திருந்தார்.
இந்த மொபைல் செயலி மூலம் பொதுமக்கள் போக்குவரத்து விதிமீறல்களை புகார் அளிக்கலாம்.
இலங்கை காவல்துறையின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.police.lk ஊடாக மின் சேவைகளை அணுகுவதன் மூலம் e-Traffic கையடக்க தொலைபேசி செயலியை இலகுவாக உங்கள் கையடக்க தொலைபேசியில் பதிவிறக்கம் செய்ய முடியும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
(Visited 15 times, 1 visits today)