இலங்கையில் 2024 இல் 312000 இற்கும் மேற்பட்ட மக்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக அறிவிப்பு!
2024ஆம் ஆண்டில் அதிகளவிலானவர்கள் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
இவ்வருடத்தில் 312,836 பேர் வேலைக்காக வெளிநாடு சென்றுள்ளதாக பணியகம் தெரிவித்துள்ளது.
185,162 ஆண் தொழிலாளர்களும் 127,674 பெண் தொழிலாளர்களும் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் 2022ஆம் ஆண்டு அதிகளவானோர் வெளிநாடுகளுக்குச் சென்றதாகவும், கடந்த 6 வருடங்களில் 13 இலட்சம் இலங்கையர்கள் தொழில் நிமித்தம் வெளிநாடு சென்றுள்ளனர்.
(Visited 2 times, 1 visits today)