கிரீஸ் – ஹோட்டலில் ஏற்பட்ட தீவிபத்து : ஒருவர் பலி, பலர் படுகாயம்!
கிரீஸில் ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 11 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Meteoraவிற்கு வெளியே உள்ள ஒரு நகரமான கலம்பகாவில் உள்ள மூன்று மாடி ஹோட்டலில் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் உட்பட 26 பேரை அவசரகால குழுக்கள் மீட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹோட்டலின் 55 வயதான உரிமையாளர் தீயணைப்பு வீரர்கள் வருவதற்கு முன்பு பால்கனியில் இருந்து விழுந்ததில் ஏற்பட்ட காயங்களால் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தீ விபத்துக்கான காரணங்களை கண்டறிய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
(Visited 37 times, 1 visits today)





