தமிழக ஆளுநரை சந்தித்த தவெக தலைவர் விஜய்
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தைக் கண்டித்து தவெக தலைவர் விஜய்யும் தனது கண்டனத்தைப் பதிவு செய்திருந்தார்.
இந்த நிலையில், விஜய் இன்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்துப் பேசினார்.
அப்போது, “தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும், அனைத்து இடங்களிலும் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், புயல் பாதிப்புக்கு மாநில அரசு கேட்கும் நிவாரணத் தொகையை மத்திய அரசு முழுமையாக வழங்க வேண்டும்” ஆகிய 3 கோரிக்கைகள் கொண்ட மனுவை ஆளுநரிடம் வழங்கினார்.
(Visited 44 times, 1 visits today)





