இந்தியாவின் பணக்கார முதல்வர் சந்திரபாபு நாயுடு
இந்தியாவில் மிகவும் பணக்கார முதல்வராக 931 கோடி சொத்து மதிப்புடன் ஆந்திராவின் தெலுங்கு சேதம் கட்சி முதல்வர் சந்திர பாபு நாயுடு முதலிடத்தில் உள்ளார்.
அதே நேரம் மிகவும் ஏழை முதல்வராக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி முதலிடத்தில் உள்ளதாக ஆய்வு அறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது.
ஜனநாயக சீர்திருத்திற்கான அமைப்பு (ADR ) மற்றும் தேசிய தேர்தல் கண்காணிப்பகம் (NEW) என்ற அமைப்பும் இணைந்து இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் மிகவும் பணக்கார முதல்வராக ஆந்திராவின் தெலுங்கு தேசம் கட்சி முதல்வர் சந்திரபாபு நாயுடு 931 கோடி சொத்து மதிப்புடன் முதலிடத்தில் உள்ளார்.
இரண்டாவது இடத்தில் அருணாச்சல் பிரதேச முதல்வர் பெமா காண்டு 332 கோடி சொத்து மதிப்புடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.
கர்நாடகா முதல்வர் சித்தராமயைா 202 கோடி சொத்து மதிப்புடன் மூன்றாம் இடத்தில் உள்ளார்.
ஏழை முதல்வர்களாக மேற்குவங்க ஆளும் திரிணமுல் காங்கிரஸ் கட்சி முதல்வர் மம்தா பானர்ஜி 15 லட்சம் சொத்து மதிப்புடன் முதலிடத்திலும், ஜம்மு-காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா 55 லட்சம் சொத்து மதிப்புடன் இரண்டாம் இடத்திலும், கேரள முதல்வர் பினராயி விஜயன் 1 கோடி சொத்து மதிப்புடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.