இலங்கை இராணுவம் மற்றும் கடற்படைக்கு புதிய தளபதிகள் நியமனம்
இலங்கை இராணுவம் மற்றும் கடற்படைத் தளபதிகள் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து புதிய நியமனங்கள் வழங்கப்பட்டன.
இலங்கை இராணுவத்தின் புதிய தளபதியாக மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ நியமிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விகும் லியனகே தனது சேவை நீடிப்பு நிறைவடைந்ததைத் தொடர்ந்து இன்று ஓய்வுபெற்றதை அடுத்து அவரது நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் காஞ்சன பனாகொட நியமிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவுக்குப் பதிலாக அவர் நியமிக்கப்பட்டுள்ளார், அவர் தனது சேவை நீடிப்பை நிறைவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
(Visited 2 times, 1 visits today)