AI அம்சங்களுடன் AirPods Pro 3 ஐ உருவாக்கும் ஆப்பிள்!
2022 இல் வெளியிடப்பட்ட ஏர்போட்ஸ் ப்ரோ (2வது தலைமுறை) அடுத்தபடியாக ஏர்போட்ஸ் ப்ரோ 3 -ஐ ஆப்பிள் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த செப்டம்பர் 2024 இல், இந்த இயர்போன்கள் ஒரு சாப்ட்வேர் அப்டேட் மூலம் சிறந்த கேட்கும் திறன்களுடன் இருக்கும்படி மேம்படுத்தப்பட்டது.
இந்த நிலையில், மூன்றாவது ஜெனரேஷன் ஏர்போட்ஸ் ப்ரோவில், ஆப்பிள் பல ஹெல்த் டிராக்கிங் அம்சங்களை இணைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குபெர்டினோ அடிப்படையிலான மாபெரும் தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள், ஏர்போட்ஸ் ப்ரோ 3 -ஐ உடல்நலன் குறித்து கண்காணிப்பதற்கான சென்சார்களுடன் உருவாக்குவதற்கான ஆரம்ப கட்டத்தில் இருப்பதாக மார்க் குர்மேன் கூறியுள்ளார்.
பவர் ஆன் செய்தியில் மார்க் குர்மன் வழங்கிய சமீபத்திய பதிப்பில், டெம்பரேச்சர் சென்சார், இதயத் துடிப்பு கண்காணிப்பு மற்றும் “உடலியல் நடவடிக்கைகளை கண்காணிக்கும் தொழில்நுட்பம்” உள்ளிட்ட பல உடல்நலக் கண்காணிப்பு அம்சங்களுடன் ஏர்போட்ஸ் ப்ரோவின் அடுத்த ஜெனரேஷனை ஆப்பிள் பரிசோதித்து வருவதாக மார்க் குர்மன் கூறுகிறார்.
ஆப்பிளின் தற்போதைய சோதனையில், வரவிருக்கும் ஏர்போட்ஸ்களை விட, ஆப்பிள் வாட்ச் மாடல்களில் இதயத் துடிப்பு குறித்த தரவு மிகவும் துல்லியமானதாக இருப்பதாகவும், ஆனால் அதன் மதிப்புகளில் பெரிய வித்தியாசம் இல்லை என்றும் குர்மன் கூறுகிறார். எனவே, ஏர்போட்ஸ் ப்ரோ 3 இல் இதய துடிப்பை மிகவும் துல்லியமாக மாற்றுவதற்காக அவர்கள் பணியாற்றி வருகின்றனர் மற்றும் நிறுவனம் இப்போது அதற்கான மேம்படுத்தல்களின் ஆரம்ப கட்டத்தில் உள்ளது என்றும் மார்க் குர்மன் கூறியுள்ளார்.
இதற்கு முன்பு கசிந்த தகவல்படி, ஏர்போட்ஸ் ப்ரோ 3 பயனர்கள் ஆப்பிள் ஹெல்த் டிராக்கிங்குக்கு, தொடர்புடைய தகவல்களை அனுப்ப இதய துடிப்பு கண்காணிப்பு அம்சத்திற்காக இரண்டு இயர்போன்களையும் அணிய வேண்டும் என்று கூறியிருந்தது. புளூடூத் செட்டிங்ஸில், பயனர்கள் இந்த செயல்பாட்டை மாற்ற முடியும் என்றும் அந்த தகவல்கள் தெரிவித்திருந்தன. மேம்படுத்தப்பட்ட ஏஐ மற்றும் ஹெல்த் அம்சங்களுடன் கூடிய ஏர்போட்ஸ் ப்ரோ 3 கேமராக்கள் 2027 இல் அறிமுகப்பத்தப்படலாம் என்றும் முன்பு கூறப்பட்டது. இந்த கேமராக்கள், தரவைச் சேகரிக்கவும், சில செயல்பாடுகளை மேம்படுத்தவும் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்க் குர்மன் வழங்கிய சமீபத்திய செய்தியின்படி, “ஏஐ மற்றும் அதன் ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் பிளாட்பார்மை” மையப்படுத்தி தனது ஏர்போட்ஸ்களை ஆப்பிள் கட்டமைப்பதால், இன்னும் ஓரிரு ஆண்டுகளில் ஏர்போட்ஸ் ப்ரோவின் மேம்பட்ட பதிப்புகளை, உள்ளமைக்கப்பட்ட கேமராக்களுடன் எதிர்காலத்தில் ஆப்பிள் வெளியிடும் என்று கூறியுள்ளார்.