ஆசியா இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

தேர்தல் முறைகளில் முக்கிய மாற்றங்களை மேற்கொள்ளும் வங்கதேச இடைக்கால அரசு

வங்காள தேசத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இட ஒதுக்கீடு தொடர்பாக நடந்த போராட்டம் வன்முறையாக மாறியது.

இதையடுத்து பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்து விட்டு இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இதையடுத்து வங்காள தேசத்தின் இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனுஸ் பொறுப்பேற்றுக் கொண்டார்.

அதன் பிறகு பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வங்காள தேசத்தில் ஓட்டு போடும் வயதை குறைக்க இடைக்கால அரசு முடிவு செய்து உள்ளது.

தற்போது அங்கு வாக்காளர்களின் குறைந்த பட்ச வயது 18 ஆக உள்ளது. இந்த வயதை 18ல் இருந்து 17 ஆக குறைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக முகமது யூனுஸ் தெரிவித்து உள்ளார்.

அடுத்த நடைபெறும் பொதுத்தேர்தலின் போது இது நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதே போல பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வயது வரம்பும் குறைக்கப்படுகிறது.

தற்போது அங்கு எம்.பி. தேர்தலில் போட்டியிடும் வயது 25ஆக இருக்கிறது. இந்த வயதை 21ஆக குறைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இளைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

(Visited 32 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி