ஸ்பெயினில் இந்த ஆண்டு குடியேற முயற்சித்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மரணம்

ஸ்பெயினில் குடியேற முயற்சித்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக அந்நாடு தெரிவித்துள்ளது.
ஸ்பெயினில் தஞ்சமடைவதற்காக பயணித்ததில், 2024ஆம் ஆண்டு மட்டும் இந்த எண்ணிக்கை பதிவாகியுள்ளது.
ஆப்பிரிக்காவின் மேற்கு அட்லாண்டிக் கடற்கரையில் இருந்து பயணித்த மக்கள், ஸ்பெயினின் கேனரி தீவை அடையும் முன்பு இறந்துள்ளனர்.
புலம்பெயர் மக்களுக்கான உதவிக்குழு ஆண்டறிக்கையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
மேலும், டிசம்பர் 27ஆம் திகதி மட்டும், 6 படகில், 300 பேர் ஸ்பெயினில் தஞ்சமடைந்ததாகவும் இந்த அறிக்கையில் தெரியவந்துள்ளது.
2024ஆம் ஆண்டில் மட்டும், 41 ஆயிரத்து 425 அகதிகள் வந்துள்ளதாக ஸ்பெயின் தெரிவித்துள்ளது.
(Visited 22 times, 2 visits today)