October 28, 2025
Breaking News
Follow Us
இந்தியா செய்தி

கேரளாவில் போதைப்பொருள் பாவனையை எதிர்த்த 60 வயது முதியவர் வெட்டிக் கொலை

திருவனந்தபுரம் மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனையை எதிர்த்ததற்காக 60 வயது முதியவர் ஒரு கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் வர்க்கலா பொலிஸ் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமமொன்றில் இடம்பெற்றுள்ளது.

ஷாஜஹான் என அடையாளம் காணப்பட்ட பாதிக்கப்பட்ட நபர், போதைப்பொருள் பாவனையை அதிகாரிகளிடம் புகாரளித்ததற்காக ஒரு கும்பலால் தாக்கப்பட்டுள்ளார்.

பலத்த காயம் அடைந்த ஷாஜகான் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை எனவும், குற்றச் செயலில் ஈடுபட்ட சந்தேக நபர்களை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

ஷாஜகானின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

(Visited 13 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி