பிரித்தானியாவின் முக்கிய பகுதியில் துப்பாக்கிச்சூடு : 39 வயது நபர் பலி!
பிரித்தானியாவில் கிறிஸ்மஸ் ஈவ் அன்று ஆயுதமேந்திய 39 வயதுடைய நபர் ஒருவர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
குறித்த சம்பவம் நேற்று (24.12) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
வெஸ்ட் மிட்லாண்ட் பகுதியில் நபர் ஒருவர் ஆயுதம் ஏந்திய நிலையில் இருப்பதாக அழைப்பு விடுக்கப்பட்டதாக வெஸ்ட் மெர்சியா காவல்துறை தெரிவித்துள்ளது.
அவரை கட்டுப்படுத்த பல மணிநேரம் முயற்சி செய்த பொலிஸார் இறுதியில் துப்பாக்கிச்சூடு மேற்கொண்டதாக விளக்கமளித்துள்ளனர்.
உதவி தலைமை கான்ஸ்டபிள் கிராண்ட் வில்ஸ் உள்ளூர் சமூகத்திற்கு ஏற்படக்கூடிய அதிர்ச்சியையும் கவலையையும் நாங்கள் குறைத்து மதிப்பிடவில்லை.
மேலும் அனைத்து பொருத்தமான நடைமுறைகளையும் நாங்கள் பின்பற்றுகிறோம் என்று குடியிருப்பாளர்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன், இதில் காவல்துறை நடத்தைக்கான சுயாதீன அலுவலகத்திற்கு உடனடியாக பரிந்துரை செய்வதும் அடங்கும் எனத் தெரிவித்துள்ளார்.