ஐரோப்பா

ஜனவரி 1 முதல் பிரிக்ஸ் கூட்டமைப்பில் பங்காளிகளாக இணையவுள்ள 9 நாடுகள்

மலேசியா, இந்தோனீசியா, தாய்லாந்து, பெலருஸ், பொலிவியா, கியூபா, உகாண்டா, கசக்ஸ்தான், உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட ஒன்பது நாடுகள் வரும் ஜனவரி 1ஆம் திகதி முதல் பிரிக்ஸ் கூட்டமைப்பில் சேரவுள்ளதாக ர‌ஷ்யா தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்த அக்டோபர் 22 முதல் 22ஆம் திகதி வரை கசான் நகரில் நடைபெற்ற மாநாட்டில் பிரிக்ஸ் கூட்டமைப்பில் சேர 35 நாடுகள் விண்ணப்பம் செய்ததாக ர‌ஷ்ய ஊடகங்கள் கூறுகின்றன.

“மாநாட்டின் நோக்கம் பிரிக்ஸ் கூட்டமைப்பை விரிவடையச் செய்வது, அது தற்போது வெற்றிகரமாக நடந்துள்ளது. இணைக்கப்படும் நாடுகளுக்கு ஒப்பந்தங்கள் அனுப்பட்டுள்ளன,” என்று ர‌ஷ்ய அதிகாரி யூரி உ‌‌ஷகோவ் தெரிவித்துள்ளனர்.

மலேசியா, இந்தோனீசியா, தாய்லாந்து, பெலருஸ், பொலிவியா, கியூபா, உகாண்டா, கசக்ஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் கூட்டமைப்பில் சேர ஒப்புதல் தெரிவித்துள்ளன. அதனையடுத்து, வரும் ஜனவரி 1ஆம் திகதி முதல் அவர்கள் கூட்டமைப்பில் உறுப்பினர்களாகச் சேர்க்கப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

எதிர்காலத்தில் பிரிக்ஸ் கூட்டமைப்பில் சேர மேலும் நான்கு நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது, விரைவில் அவர்களும் அமைப்பில் இணைவார்கள் என்றும் யூரி உ‌‌ஷகோவ் கூறினார். 20க்கும் மேற்பட்ட நாடுகள் பிரிக்ஸ் அமைப்புடன் இணைந்து செயல்பட விருப்பம் தெரிவித்துள்ளன. ஒரே மாதிரியான சிந்தனைகள் கொண்ட நாடுகள் ஒன்றாக செயல்படுவது சிறப்பு என்றார் அவர்.

(Visited 51 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்