06 பேருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணை : 01 மில்லியன் பரிசு தொகை வழங்கும் ஹொங்கொங்!
வெளிநாட்டில் உள்ள 06 ஆர்வலர்கள் பற்றிய தகவல்களை வழங்குவோருக்கு ஹொங்கொங் பொலிஸார் ஒரு மில்லியன் டொலர் பரிசு தொகை அறிவித்துள்ளனர்.
குறித்த 6 பேரும் தேசிய பாதுகாப்பு குற்றங்களான பிரிவினை, அடிபணிதல் மற்றும் வெளிநாட்டு சக்திகளுடன் கூட்டுசேர்தல் போன்ற குற்றங்களுக்காக தேடப்படுகின்றனர்.
டோனி சுங், கார்மென் லாவ், க்ளோ சியுங், டெட் ஹுய், நாதன் லா ஆகியோருக்கு எதிராகவே பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டில் நடந்த பாரிய அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்களைத் தொடர்ந்து அவர்களுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.
இரண்டு கனேடிய குடிமக்கள் உட்பட ஆறு பேர் – U.K மற்றும் கனடாவில் வாழ்கின்றனர். தங்கள் நாடுகளில் வசிக்கும் ஹாங்காங் மக்களை அச்சுறுத்தும் ஹாங்காங் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு எதிராக பின்வாங்க உடனடியாக செயல்படுமாறு இங்கிலாந்து மற்றும் கனேடிய அரசாங்கங்களை அவர்கள் வலியுறுத்துகின்றனர்.