ஷேக் ஹசீனாவை நாடு கடத்தும் படி பங்களாதேஷ் இந்தியாவிடம் கோரிக்கை!

பதவி நீக்கம் செய்யப்பட்ட பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை நாடு கடத்தும் படி பங்களாதேஷின் இடைக்கால அரசாங்கம், இந்தியாவை ராஜதந்திர ரீதியாக கோரியுள்ளது.
16 ஆண்டு காலமாக ஆட்சி செலுத்திய அவர் பதவியிலிருந்து விலக்கப்பட்டதன் பின்னர் கடந்த ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி முதல் இந்தியாவில் வசித்து வருகிறார்.
இந்தநிலையில், ஷேக் ஹசீனா, அவரது அமைச்சர்கள், ஆலோசகர்கள் மற்றும் முன்னாள் இராணுவ அதிகாரிகள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் உள்பட இனப்படுகொலையில் ஈடுபட்டார்கள் என டாக்காவை தளமாகக் கொண்ட சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், குற்றம் சாட்டியுள்ளது.
இவர்களுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தால் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Visited 50 times, 1 visits today)