இலங்கையில் சத்திரசிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சிறுமி பலி : வைத்தியசாலை ஊழியர்கள் மீது குற்றச்சாட்டு!
ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சத்திரசிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 9 வயது சிறுவன் சத்திரசிகிச்சையின் பின்னர் மயக்கமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
இதற்கு வைத்தியசாலை ஊழியர்களே காரணம் என குழந்தையின் உறவினர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
ஹொரணை பிரதான பாடசாலையில் நான்காம் வருடத்தில் கல்வி கற்கும் தனுஜ விக்கிரமாராச்சி என்பவரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த குழந்தையின் பெற்றோர் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியரை பிலியந்தலை வைத்திய நிலையத்திற்கு அனுப்பி வைத்ததாகவும், பின்னர் வைத்தியரின் ஆலோசனையின் பேரில் கடந்த 17 ஆம் திகதி அவர் பணிபுரியும் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மறுநாள் (18) பிற்பகல் 01.30 மணியளவில், இது தொடர்பான சத்திரசிகிச்சைக்காக குழந்தைக்கு மயக்க மருந்து செலுத்தப்பட்டதுடன், சத்திரசிகிச்சை நிறைவடைந்த போதிலும், குழந்தை சுயநினைவு பெறவில்லை.
பின்னர், பெற்றோர் மற்றும் உறவினர்களின் பலமான வேண்டுகோளுக்கு இணங்க, வைத்தியசாலை அதிகாரிகள் குழந்தையை மேலதிக சிகிச்சைக்காக பொரளை ரிட்ஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அன்றைய தினம் மாலை 6.45 மணிக்கு அனுமதித்துள்ளனர்.
இந்நிலையில் குழந்தை உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டதாக உறவினர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். இதன் அடிப்படையில் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.