ஜேர்மன் தாக்குதல் சம்பவம் : குற்றவாளிக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!
ஜேர்மனியின் Magdeburg நகரில் கிறிஸ்துமஸ் சந்தையில் தாக்குதல் நடத்திய நபர் கொலை குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கியுள்ளார்.
சவூதி அரேபியாவை பூர்வீகமாகக் கொண்ட தலேப் அல்-அப்துல்மோஹ்சென் (50) என்ற சந்தேக நபர் இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியுள்ளார்.
ஐந்து கொலைக் குற்றச்சாட்டுகள் மற்றும் கொலை முயற்சி மற்றும் கடுமையான உடல் காயங்களை ஏற்படுத்திய இரண்டு குற்றச்சாட்டுகளின் கீழ் அவரை விசாரணைக்கு உட்படுத்துமாறு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
தலைநகர் பெர்லினுக்கு மேற்கே 75 மைல் தொலைவில் கிழக்கு ஜேர்மனிய நகரத்தில் பண்டிகைக் கொண்டாட்டங்களுக்குச் சென்றவர்கள் மீது குறித்த தாக்குதல் சம்பவம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் காவல்துறையினரின் விசாரணையில் இந்த தாக்குதலை அவர் திட்டமிட்டு மேற்கொண்டது தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.