இலங்கையில் பாரிய அளவு வீழ்ச்சியடைந்துள்ள ஏற்றுமதி பொருளாதாரம்!
இலங்கையில் 2024 ஆம் ஆண்டில் ஏற்றுமதி செய்யும் விகிதம் பாரிய அளவு சரிவை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சுங்க திணைக்களத்தின் அறிவிப்பின்படி, நவம்பர் 2024 இல் பொருட்கள் மற்றும் சேவைகள் இரண்டையும் சேர்த்து மொத்த ஏற்றுமதி 1,269.33 மில்லியன் அமெரிக்க டாலர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் இது 0.04% வளர்ச்சியாகும்.
எவ்வாறாயினும் 2024 நவம்பரில் சரக்கு ஏற்றுமதி செயல்திறன் 943.1 மில்லியன் அமெரிக்க டாலர்களாக பதிவாகியுள்ளது, இது நவம்பர் 2023 உடன் ஒப்பிடும்போது 5.6% சரிவாகும்.
(Visited 1 times, 1 visits today)