ஜெர்மனியில் சமூக உதவி பணம் வழங்கப்படுவதை முற்றாக நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை
ஜெர்மனியில் சமூக உதவி பணம் வழங்கப்படுவதை முற்றாக நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
அடுத்த வருடம் ஜெர்மனியில் பொது தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் பிரதான எதிர்கட்சியான CDU கட்சியானது பல கோரிக்கைகளை முன்வைத்து தேர்தல் களத்தில் இறங்கியுள்ளது.
தற்போதைய அரசாங்கமானது நடைமுறப்படுத்திய பேர்கர் கில்ட் என்ற சமூக உதவி பணத்தை முற்றாக நீக்க வேண்டும் என்ற கருத்தை கூறி வருகின்றது.
CDU கட்சியுடைய பொது செயலாளர் காசன் லின்னம் அவர்கள் கருத்து வெளியிடுகையில் இந்த பேர்கர் கில்ட் என்று சொல்லப்படும் சொற்பதத்திற்கு பதிலாக குர்சிகர் என்று சொல்லப்படும் அடிப்படை தேவைகளை நிவர்த்தி செய்கின்ற நிதியத்தை வழங்க வேண்டும் என்றும், குறிப்பிட்டுள்ளார்.
1.7 மில்லியன் மக்கள் வேலை செய்ய கூடிய நிலையில் இருக்கின்றார்கள் என்றும், இவர்கள் வேலைக்கு செல்லது விடுகின்றார்கள் என்ற காரணத்தினால் இவர்கள் மீதான மேலதிக தடைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் எதிர் வரும் பொது தேர்தலின் பின் இந்த கருத்து தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.