இலங்கையில் கைவிடப்பட்ட நிலையில் சிசுவின் சடலம் மீட்பு!
தெமட்டகொட மேம்பாலத்திற்கு அருகில் புதிதாகப் பிறந்த குழந்தையொன்று கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஒரு துணியில் சுற்றப்பட்ட நிலையில் பெண் சிசு கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, வழிப்போக்கர் ஒருவர் தெமட்டகொட பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து, தெரியவந்துள்ளது.
அதிகாரிகள் உடனடியாக குழந்தையை கொழும்பில் உள்ள லேடி ரிட்ஜ்வே குழந்தைகளுக்கான மருத்துவமனைக்கு மாற்றியுள்ளனர். எவ்வாறாயினும், பரிசோதனையில் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் உறுதி செய்தது.
நல்ல உடல் நிலையுடன் காணப்பட்ட குழந்தை, கைவிடப்படுவதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்னர் பிறந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.
சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த பின்னர் தெமட்டகொட பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.