இலங்கையில் இந்த ஆண்டில் பதிவான சாலை விபத்துகளில் 2000இற்கும் மேற்பட்டவர்கள் பலி!
இலங்கையில் இந்த ஆண்டில் மொத்தம் 2,243 பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
ஜனவரி 1 முதல் டிசம்பர் 13, 2024 வரை 22,967 சாலை விபத்துக்கள் பதிவாகியுள்ளதாகவும், அவற்றில் , 2,141 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகறிது.
இந்த காலப்பகுதியில் 6,500 பாரிய விபத்துகளும் 9,127 சிறிய விபத்துகளும் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் கடந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற விபத்துக்களில் குறைந்தது 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஹட்டன், மாரவில, அம்பலாந்தோட்டை, கம்பளை, ஹெட்டிபொல, மட்டக்களப்பு, மிரிஹான, கெபித்திகொல்லேவ மற்றும் சீதுவ ஆகிய இடங்களில் நேற்று (21) இந்த விபத்துக்கள் பதிவாகியுள்ளன.
(Visited 2 times, 2 visits today)