இலங்கை: காலியில் துப்பாக்கி சூடு- கணவன் மரணம்! மனைவி படுகாயம்
காலியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
உயிரிழந்தவர் 38 வயதானவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அப்போது அவருடன் வந்த அவரது மனைவி படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தம்பதியினர் காலியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது, மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணத்தை கண்டறிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
(Visited 1 times, 1 visits today)