ஜேர்மனியில் சந்தையில் இடம்பெற்ற தாக்குதல் : பலி எண்ணிக்கை உயர்வு!
ஜேர்மனியின் கிழக்குப் பகுதியில் உள்ள மாக்டேபர்க் நகரில் கிறிஸ்துமஸ் சந்தையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஐந்துபேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்தில் 200இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
நேற்று (20) பிற்பகல் நபர் ஒருவர் கார் ஒன்றை சந்தைக்குள் செலுத்தி இந்த விபத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
விபத்தை ஏற்படுத்திய சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் 50 வயதுடைய சவூதி அரேபிய பிரஜை என தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் குறித்த காரை வாடகைக்கு எடுத்து வேண்டுமென்றே விபத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், இது பயங்கரவாதச் செயல் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
(Visited 2 times, 1 visits today)