ஜப்பானில் குழந்தையின் உயிரை பறித்த சீஸ்
ஜப்பானில் சீஸ் உருண்டை தொண்டையில் சிக்கியதால் ஒரு வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சிரயை ஏற்படுத்தியுள்ளது.
அதுபோன்ற மேலும் 3 சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக அவர்கள் கூறினர். ஆனால் இதுவரை அந்த குழந்தை மட்டுமே இறந்திருப்பதாக சொல்லப்பட்டது.
சம்பவம் ஆகஸ்ட் மாதம் நடந்தது.
இரவு உணவின்போது சுமார் 2 செண்டிமீட்டர் அகலம் கொண்ட சீஸ் உருண்டையை குழந்தை உட்கொண்டுள்ளது.
அது தொண்டையில் சிக்கியதால் குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
அதை வெளியே அகற்ற முடியாததால் குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் காப்பாற்ற முடியாமல் போயுள்ளது.
ஆனால் 12 நாட்களுக்குப் பின் குழந்தை இறந்ததாகக் கூறப்பட்டது.





