ஜெர்மனியில் பொது போக்குவரத்தில் கடுமையாகும் கட்டுப்பாடு!
ஜெர்மனி தலைநகரில் பொது போக்குவரத்தில் பயணிகளுக்கு இடையூறு விளைவிப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது
இது தொடர்பில் பெர்லின் பொது போக்குவரத்து சேவையான BVG பேருந்து பயணிகளுக்கு புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
கையடக்க தொலைபேசிகளில் இருந்து வெளிவரும் சத்தம், அழைப்புகள் மற்றும் டிக்டோக் வீடியோக்கள் போன்றவற்றை குறைந்தபட்ச சத்தத்தில் வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது
சத்தமாக வீடியோக்கள் பார்த்தல், ரீல்ஸ் ஸ்க்ரோல் செய்தல் அல்லது பயணிகளுக்கு எதிரே அமர்ந்து முறையற்ற முறையில் சத்தமாக வீடியோ பார்ப்பவராக இருந்தால் பொதுப் போக்குவரத்தில் ஹெட்போன்களைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
புதிய BVG கொள்கைக்கு உதவுமாறு பொது மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதிக எண்ணிக்கையிலான பயணிகள் அதிக சத்தத்துடன் வீடியோக்கள் மற்றும் தொலைபேசி அழைப்புகள் மேற்கொண்டு அமைதியான வர விரும்பும் பயணிகளுக்கு இடையூறு விளைவிப்பதாக BVG செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.