புற்றுநோய்க்கான தடுப்பூசி கண்டுபிடித்த ரஷ்யா – 2025 முதல் இலவசமாக வழங்க இருப்பதாக அறிவிப்பு
புற்று நோய்க்கு தடுப்பூசி கண்டுபிடித்து உள்ளதாக அறிவித்துள்ள ரஷ்யா, அதை இலவசமாக வழங்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இதனால் உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலக அளவில் மனிதர்களை ஆட்டி படைக்கும் நோய்களில் ஒன்று புற்றுநோய் என்பதும், இதை குணப்படுத்த பல ஆராய்ச்சிகள் உலகம் முழுவதும் நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், புற்று நோயை தடுக்கும் தடுப்பூசியை கண்டுபிடித்து விட்டதாக ரஷ்ய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. ரஷ்ய விஞ்ஞானிகள் புற்று நோய்க்கு எதிரான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் நிறைவு கட்டத்தில் இருப்பதாகவும், இந்த தடுப்பூசி விரைவில் உலகம் முழுவதும் பயன்பாட்டிற்கு வரும் என்றும் அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.
இந்த தடுப்பூசி 2025 ஆம் ஆண்டு முதல் சந்தையில் கிடைக்கும் என்றும், நோயாளிகள் தடுப்பூசிகளை இலவசமாகவே பெற்றுக் கொள்ளலாம் என்றும் ரஷ்ய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. ரஷ்யர்களுக்கு மட்டுமின்றி, உலகம் முழுவதும் இந்த தடுப்பூசியை இலவசமாக வழங்க உள்ளோம் என்றும், இதன் மூலம் புற்றுநோய் இல்லாத உலகத்தை உருவாக்க முடியும் என்றும் ரஷ்ய சுகாதாரத்துறை குறிப்பிட்டுள்ளது.
இதனால், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவில் ஒரு நல்ல காலம் வரப்போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.