இலங்கை: தடுப்பூசியின் பின்னர் நோய்வாய்ப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள்: விசாரணைக்கு உத்தரவு
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தின் இரண்டாம் வருட மாணவர்கள் 7 பேர் பல்கலைக்கழக மருத்துவ நிலையத்தில் தடுப்பூசி போட்டுக்கொண்டதன் காரணமாக சுகவீனமடைந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு பிரதமர் ஹரினி அமரசூரிய பணிப்புரை விடுத்துள்ளார்.
பாதிக்கப்பட்ட மாணவர்கள் மேல் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
மாணவர்களின் நிலைமையை மதிப்பீடு செய்து விசாரணைகளை துரிதப்படுத்துமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், விவசாய விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதி மற்றும் பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி ஆகியோருக்கு பிரதமர் பணிப்புரை விடுத்துள்ளார்.
(Visited 1 times, 1 visits today)