உலகம் செய்தி

வெடிகுண்டு வெடித்ததில் ரஷ்யாவின் அணுசக்தி பாதுகாப்பு படையின் தலைவர் பலி

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடந்த வெடிவிபத்தில் அணுசக்தி பாதுகாப்பு படையின் தலைவர் லெப்டினன்ட் இகோர் கிரில்லோவ் (57) பலியானார்.

இகோர் ரஷ்யாவின் அணு, உயிரியல் மற்றும் இரசாயன பாதுகாப்புப் படைகளின் தலைவர் ஆவார்.

மாஸ்கோவில் உள்ள ரியாசான்ஸ்கி ப்ராஸ்பெக்டில் அடுக்குமாடி குடியிருப்பின் நுழைவாயிலில் நிறுத்தப்பட்டிருந்த மின்சார ஸ்கூட்டரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு காரணமாக மரணம் நிகழ்ந்துள்ளது.

இந்த வெடிப்பில் இகோரின் உதவி இராணுவ வீரரும் கொல்லப்பட்டதாக ரஷ்யாவின் அரசு செய்தி நிறுவனமான டாஸ் தெரிவித்துள்ளது.

இந்த குண்டுவெடிப்புக்கு உக்ரைனின் பாதுகாப்புப் படையினர் பொறுப்பேற்றுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.

கிரெம்ளினில் இருந்து ஏழு கிலோமீட்டர் தொலைவில் இந்த வெடிப்பு நிகழ்ந்துள்ளது.

கிரில்லோவ் ஏப்ரல் 2017 இல் அணுசக்தி பாதுகாப்புப் படைகளின் கட்டளையை ஏற்றுக்கொண்டார்.

அவர் கதிர்வீச்சு, இரசாயன, உயிரியல் மற்றும் பாதுகாப்பு படைகளின் தலைவராக பணியாற்றினார்.

உக்ரைனில் ரஷ்ய இராணுவ நடவடிக்கைகளின் போது தடைசெய்யப்பட்ட இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு கிரில்லோவ் கொல்லப்பட்டார்.

கிரிலோவ் ஒரு போர்க்குற்றவாளி என்றும் அவரது கொலை “முற்றிலும் சட்டபூர்வமானது” என்றும் உக்ரைனின் உயர்மட்ட அதிகாரிகள் கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!