பிரித்தானியாவில் தினசரி வீசி எறியப்படும் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட மின் சிகரெட்டுகள்
பிரித்தானியாவில் தினசரி ஒவ்வொரு நொடியும் 13 மின் சிகரெட்டுகள் தூக்கி வீசப்படுவதாக தெரியவந்துள்ளது.
தினமும் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட மின் சிகரெட்டுகள் அங்கு குப்பையில் வீசப்படுகின்றன. அது சுற்றுச்சுழலுக்கு அச்சுறுத்தலாக அமைவதாய் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
Big Puff எனப்படும் மின் சிகரெட்டுகளைத் தற்போது அதிகமானோர் பயன்படுத்துவதாகக் கூறப்பட்டது. பார்க்கப் பெரிதாக இருக்கும்.. அதில் 6,000 முறை வரை புகைப்பிடிக்கலாம்.
ஒருமுறை பயன்படுத்தும் மின் சிகரெட்டுகளில் சராசரியாக 600 முறை புகைப்பிடிக்கலாம். ஒருமுறை பயன்படுத்தும் மின் சிகரெட்டுகளின் விற்பனை அடுத்த ஆண்டு (2025) ஜூன் முதல் தடைசெய்யப்படும்.
பிள்ளைகள் அவற்றைப் பயன்படுத்துவதைத் தடுக்கவும் சுற்றுச்சூழல் சேதமாவதைத் தடுக்கவும் அந்தத் தடை அறிவிக்கப்பட்டது. எந்த வகை மின் சிகரெட்டாக இருந்தாலும் அவற்றில் Litihium-ion மின்கலன்கள் உள்ளன. நசுக்கப்படும்போது அவை ஆபத்தை ஏற்படுத்தலாம். தீச்சம்பவங்கள் ஏற்படலாம் என்று சுற்றுப்புற ஆர்வலர்கள் எச்சரித்தனர்.