இலங்கை – தாயை தாக்கி கொன்ற மகன்… எடுத்த வீபரீத முடிவு!
தனிப்பட்ட தகராறு காரணமாக ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி தாயை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொன்ற மகன் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (15) கொடகவெல, பிசோகொடுவ பிரதேசத்தில் 82 வயதுடைய பெண் ஒருவர் அவரது மகனால் இவ்வாறு கொல்லப்பட்டிருந்தார்.
பின்னர், மகன் அப்பகுதியில் இருந்து தப்பிச் சென்றதுடன், உடவலவ, குருமடயா பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டதாக பிரதேசவாசிகள் பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்துள்ளனர்.
சந்தேகநபர் கல்பாய, பல்லேபெத்த பிரதேசத்தில் வசித்து வந்த 54 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொடகவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
(Visited 4 times, 4 visits today)