தாய்லாந்தில் மர்மமான முறையில் உயிரிழந்த பிரித்தானிய பயணி!
தாய்லாந்தில் நடந்த பிரபல பௌர்ணமி விருந்தில் கலந்து கொண்ட பிரித்தானிய சுற்றுலாப் பயணி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கென்ட்டின் கில்லிங்ஹாமைச் சேர்ந்த 37 வயதான கிறிஸ்டோபர் ஸ்டீபன் பௌச்சர் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அவர் தனது ஹோட்டலுக்கு சென்றுக்கொண்டிருந்தபோது பணம் எடுப்பதற்காக ஏடிஎம் இயந்திரத்திற்கு சென்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அவர் உயிரற்ற நிலையில் இன்று (16.12) காலை இனங்காணப்பட்டதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
சம்பவம் குறித்த விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
(Visited 1 times, 1 visits today)