இந்தியா – அவுஸ்திரேலியா அணிகளின் டெஸ்ட் போட்டி – 10 பந்துகளால் 5.4 கோடி இழப்பு

இந்தியா – அவுஸ்திரேலியா அணிகள் மோதும் 3ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழை காரணமாக 13.2 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டதுடன், இடையில் ஆட்டம் இரத்து செய்யப்பட்டது.
டெஸ்ட் போட்டி தினத்தில் குறைந்தபட்சம் 15 ஓவர்கள் வீசப்படாவிட்டால் டிக்கெட் கட்டணத்தை திருப்பி வழங்க வேண்டும் என அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை முன்னதாக அறிவித்திருந்தது.
இதன்படி 30,145 இரசிகர்களுக்கும் டிக்கெட்டின் முழு கட்டணமும் திரும்ப வழங்கப்படும் என அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை அறிவித்தது.
இதனால் அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையினால் ரூ.5.4 கோடி திருப்பி வழங்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
10 பந்துகள் குறைவாக வீசப்பட்டதால் அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபைக்கு ரூ.5.4 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Visited 25 times, 1 visits today)