யாழில் வேகமாக பரவிவரும் எலிக் காய்ச்சல் – பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுப்பு!
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் எலிக் காய்ச்சலுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் இதனை தெரிவித்துள்ளார்.
பருத்தித்துறையில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் எலிக் காய்ச்சலினால் இதுவரையில் 76 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது யாழ்ப்பாண மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக டெங்கு மற்றும் எலிக் காய்ச்சல் என்பன தொடர்பில் அவதானமாக இருக்குமாறு யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.
(Visited 3 times, 3 visits today)