10 பந்துகளால் 5.4 கோடி இழந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழை காரணமாக 13.2 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டது. பாதியில் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் விதிப்படி டெஸ்ட் போட்டியின் தினத்தில் குறைந்தபட்சம் 15 ஓவர்கள் வீசப்படா விட்டால் டிக்கெட் கட்டணத்தை 100 சதவீதம் திருப்பி வழங்க வேண்டும்.
இதன்படி 30,145 ரசிகர் களுக்கும் டிக்கெட்டின் முழுத் தொகை திரும்ப வழங்கப்படும் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
இந்த வகையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் 5.4 கோடியை திரும்ப வழங்க உள்ளது. 10 பந்துகள் குறைவாக வீசப்பட்டதால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துக்கு 5.4 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
(Visited 12 times, 1 visits today)