எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பல் குறித்த விவாதத்தை நடத்தாமல் இருக்குமாறு கோரிக்கை!
வழக்கு விசாரணை இடம்பெற்றுக்கொண்டிருக்கையில்இ எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீப்பற்றியதால் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பான விடயங்களை விவாதிப்பதால் வழக்கு விசாரணைக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் இருக்கிறது.
அதனால் இந்த விவாதத்தை நடத்தாமல் இருப்பதற்கு சபாநாயகர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என நீதியமைச்சர் விஜயதாஷ ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.
விவாதம் காரணமாக நட்டஈடு பெற்றுக்கொள்வதில் பாதிப்பு ஏற்பட்டால் அதற்கான பாெறுப்பை சபாநாயகர் உட்பட பிரேரணையில் கலந்துகொண்டவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் அவை நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்பட்டபோது இ எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீப்பற்றியதால் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதம் ஆரம்பிக்கப்பட்டது.
இதன்போது ஒழுங்கு பிரச்சினையை முன்வைத்து பேசிய விஜயதாஷ ராஜபக்ஷ மேற்படி தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து பாராளுமன்ற நடவடிக்கை சபாநாயகரினால் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்படுவதாக தெரிவித்து ஒன்றரை மணி நேர்த்துக்கு பின்னர் மீண்டும் கூடியது.