இலங்கை: கல்வியமைச்சுக்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்துடன் தொடர்புடைய மேலும் மூவர் கைது!
பாடசாலைகளில் கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வரும் சுமார் 16,000 அபிவிருத்தி உத்தியோகத்தர்களை, ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்குமாறு கோரி கல்வியமைச்சுக்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்துடன் தொடர்புடைய மேலும் 3 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் கடுவலை பதில் நீதவான் டெலானீ முனசிங்க முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டனர்.
இதன்பின்னர், அவர்களில் இரண்டு பேர் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன், மற்றொருவரை எதிர்வரும் 17ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் முன்னதாக 4 பேர் கைதுசெய்யப்பட்டதுடன், அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கல்வியமைச்சின் முன்பாக அபிவிருத்தி உத்தியோகத்தர்களினால் அண்மையில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது 3 காவல்துறை அதிகாரிகள் காயமடைந்தனர்.